மதுபோதையில் அட்டகாசம் புரிந்த அறுவருக்கு விளக்கமறியல்

judgement_court_pinaiயாழ். பண்ணை பூங்காவில் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிந்த அறுவரை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ். பண்ணை பூங்கா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அறுவர் ஒன்று கூடி மது அருந்தியதுடன், அப்பகுதியில் இருந்தவர்களுடன் தகராற்றில் ஈடுபட்டு அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.விக்கிரமராச்சி குறித்த அறுவரையும் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜா்படுத்திய வேளையிலேயே அறுவரையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor