மதுபான நிலையத்திலிருந்து வெளியே வந்தவர் திடீரென்று மயங்கி விழுந்து மரணம்

body_foundமதுபான நிலையத்திலிருந்து வெளியே வந்த குடும்பத்தர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து சில மணித்தியாலயங்களிலேயே மரணமான சம்பவம் ஒன்று திருநெல்வேலிப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பலாலி வீதியைச் சேர்ந்த அந்தோனிராஜ் ஜோச் (வயது 53) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே மரணமானவராவார்.

இவர் அதிகளவான மதுவினை உட்கொண்டதால் மயங்கி விழுந்த நிலையில் மரணமானதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றய தினம் காலையில் திருநெல்வேலியில் வீதியோரமாய் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.