தென் ஆபிரிக்காவின் முன்னாள் சனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தென் ஆபிரிக்கா சென்றிருக்கும் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜொஹனஸ்பேர்க்கில் உள்ள எப் என் பி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வல் கலந்து கொண்டார்.
எப்என்பி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பல்வேறு அரச தலைவர்களும் விசேட அதிதிகளும் கலந்துகொண்டனர்.
யூனியன் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள தலைவர் மண்டேலாவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரிட்டோரியா நகருக்கு பயணமாகிறார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதுடன், சிவில் விமான சேவைகள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் சனாதிபதியுடன் தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.