Ad Widget

மட்டக்களப்பு, காங்கேசன்துறைக்கிடையிலான இ.போ.ச. பஸ் சேவை ஆரம்பம்

மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது [ 412 கி மீ] தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு, யாழ் மக்களினதும் ,இசை நடனக் கல்லூரி, கல்வியயல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த இரவு நேர பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்ப பட்டுள்ளது .

இதன் படி மட்டக்களப்பில் இருந்து இரவு 8.20 க்கும் காங்கேசன்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து இரவு 9.30 க்கும் தனது சேவையை தொடர்கின்றது.

இந்த நிகழ்வுக்கு மாநகர ஆணையாளர் உதயகுமார் மற்றும் சாலை முகாமையாளர் எம் கிருஸ்ணராஜா, பிரதான பிராந்திய முகாமையாளர் எ .எல் சித்திக் மற்றும் சாலை அதிகாரிகள், சாரதிகள், நடத்துனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts