மக்களை முட்டாள்களாக்க முயலும் பட்ஜெட்! – சுரேஷ் எம்.பி.

தேர்தலை மட்டுமே இலக்ககக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வரவு – செலவுத் திட்டம் மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கும் ஒரு நடவடிக்கையே. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்

suresh

நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட 2015ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – தேர்தலை இலக்கக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. வரவு – செலவுத் திட்டத்தல் குறிப்பிடப்பட்டவற்றை அமுல் படுத்தவேண்டிய நிதியீட்டல்களுக்கான வழிவகைகள் கேள்விக்குறியே. இந்த பட்ஜெட் தேர்தல் காலம் வரைக்கும் அமுல்படுத்தப்படுமா அல்லது அது தொடர்ந்து நடைமுறையில் இருக்குமா என்பது போன்ற பல ஐயங்களைத் தோற்றுவித்துள்ளது. மொத்தத்தில் இது மக்களை முட்டாக்களாக்க முனையும் நடவடிக்கையே. – என்றார்.