மக்களுக்கான உதவிகள் எங்கிருந்து வருகின்றன?- கஜேந்திரனிடம் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான  செல்வராசா கஜேந்திரன் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலை 9.30மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலத்தில்  விசாரணைக்காக சென்றிருந்தார். விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் செய்யப்படும் மக்கள் உதவிக்கான நிதி வளங்கள் எப்படி கிடைக்கின்றன என்பது பற்றி கேள்விகள் தொடுக்கப்பட்டதாக அவர் எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்தார்.