மகள் மீது தாய் முறைப்பாடு

தனது நகை மற்றும் பணத்தை மகள் திருடிக்கொண்டு சனிக்கிழமை (25) இரவு ஓடிவிட்டதாக கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வீட்டிலிருந்த 25 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபாய் காசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கிளிநொச்சி இரணைமடுவை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் மகள் சென்றுவிட்டதாக தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் திருட்டு குற்றச்சாட்டில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.