போலிப்பதிப்பு குறித்து மக்கள் குழப்பம் கொள்ள வேண்டாம்!- உதயன் நிர்வாகம்

உரிமையா சலுகையா, வரலாற்று முடிவு இன்று தமிழர் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் இன்றைய நாளில் அனைவரும் எழுச்சி கொள்வோம். என்ற தலைப்புடனேயே இன்றைய உதயன் நாளிதழ் வெளிவந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.என உதயன் பத்திரிகை நிர்வாகம் அறிவித்திருக்கிறது

தேர்தல் தினமான இன்று உதயன் பத்திரிகையின் பிந்திய பதிப்பு என அச்சிடப்பட்டு விசமிகளால் முக்கிய இடங்களில் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு வருகின்றது.அதில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திகளுக்கும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.வாக்களிப்பு தொடர்பில் மக்களை குழப்புவதற்கே இந்த நாசகார வேலை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.என அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது

இந்த போலிப்பதிப்பு தொடர்பில் வேட்பாளர் அனந்தி எழிலனும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் இலக்கம் 1இல் போட்டியிடும் அனந்தி சசிதரன் ஆகிய நான் தேர்தலில் இருந்து விலகிவிட்டேன் என்ற போலியான செய்தியை யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளிவரும் உதயன் பத்திரிகை விசேட பதிப்பு மூலம் வெளியிட்டதாக அரச சார்புத் தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகிறது.

இது முற்று முழுதான பொய்ப்பிரசாரம். நான் ஏற்கனவே தெரிவித்தது போல, இத்தைகைய பொய்யான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களைக் குழப்பி என்னை மக்களிடமிருந்து ஓரங்கட்டுவதற்காகவும் எனது விருப்பு வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவும் அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையே இதுவாகும்.

நான் தேர்தலிலிருந்து விலகவில்லை. விலக மாட்டேன். ஆகவே தயவு செய்து எம்மக்களாகிய நீங்கள் இத்தைகைய பொய்ப்பிரசாரங்களுக்கு செவி சாய்க்கவேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்வதுடன் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன் என அனந்தி தெரிவித்துள்ளார்.

விசேட பதிப்பு என அரச தரப்பினரால் வெளியிடப்பட்ட போலிப்பதிப்பு இது தான்

uthayan_paper_001

uthayan