போலிநகைகளை அடகு வைக்க முயன்ற மூவர் கைது

arrest_1வங்கியில் தங்கம் எனக் கூறி போலி நகைகளை அடகு வைக்க முயன்ற மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி மக்கள் வங்கியில் தங்கம் எனக் கூறி போலிநகைகளை 70 இலட்சத்திற்கு அடகு வைக்க முயன்ற 3 பேரை நேற்று நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எக்கநாயக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor