பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள்

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகமான முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் அதன் எண்ணிக்கை 158 என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இது தொடர்பில் விசேட பரிசீலனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.