பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

யாழ். கோட்டைப் பகுதியில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (17) இரவு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் இன்று திங்கட்கிழமை (18) தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ரம்பன்ன (வயது 48) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு இருவர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கைகலப்பில் ஈடுபட்டவர்களைச் சமரசம் செய்வதற்கு முயன்ற, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் மீது கைகலப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரின் கடமையை செய்யவிடாமை மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை ஆகிய குற்றங்களுக்காக வவுனியாவைச் சேர்ந்த சந்தேகநபரைக் கைது செய்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor