பொலிஸாரின் எச்சரிக்கை சுவரொட்டிகள்

நல்லூர் ஆலயச் சூழலில் எச்சரிக்கை சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டிவருகின்றனர். நல்லூர் உற்சவ காலத்தில் தங்க ஆபரணங்கள் திருட்டுப் போகமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Nallur-notes

கடந்த காலத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சில பெண்களின் புகைப்டத்துடனேயே இந்த எச்சரிக்கை சுவரொட்டிகளை நல்லூர் ஆலயச் சூழலில் பொலிஸார் ஒட்டி வருகின்றனர்.

திருடர்களின் கைவரிசையில் இருந்து உங்கள் பணம், நகைகள் மற்றும் பொருட்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் இருங்கள் என்ற தொனிப்பொருளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.