பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்!!

எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கொண்டுள்ளார் .

மாகாண சபைகளின் உதவியுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் (NTC) ஒவ்வொரு பிரிவிற்குமான தேவைகளை இனங்கண்டு, எரிபொருள் தேவைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த வாரத்திற்குள் கூடுதல் ஒதுக்கீட்டை (தனி QR) குறியீட்டில் ஒதுக்குவதற்கான வாய்ப்பை அமைச்சகம் பரிசீலிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

அதுவரை, 107 சி.டி.பி டிப்போக்களில் இருந்து தனியார் பேருந்துகளின் தேவைகளை சி.டி.பி டிப்போக்கள் தொடர்ந்து பூர்த்தி செய்யும் என அமைச்சர் குறிப்பிட்டார் .