பொதுப்பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்தது.

சில பீடங்களின் பரீட்சை முடிவுகள் குறித்த காலப்பகுதியில் வெளிவராத காரணத்தினாலேயே இப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு பிற்போடப்படுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.