Ad Widget

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழில் விசேட வழிபாடு

puththar-palalyயாழில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகளும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது. நேற்று காலை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் விசேட பந்தல்கள் அமைக்கப்பட்டு அன்தானம் மற்றும் தாக சாந்திகளும் இடம்பெற்று வருகின்றது.

இதில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் யாழ் நாகவிகாரை மற்றும் சில திணைக்களங்களிலும் இந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. யாழ் நாகவிகாரையில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாகவிகார பிரதம தேரர் கலைமாணி மீகஹஜந்துரே விமல தேரர் தலமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.

இந்த வழிபாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானங்களையும் வழங்கிவைத்தார். இவ்வழிபாடுகளில் யாழ் இந்துபௌத்த அறநெறிப்பாடசாலையில் கல்வி கற்று வரும் மாணவர்கள் உட்பட பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Related Posts