Ad Widget

பொருளாதார நெருக்கடியில் வடபகுதி மீனவர்கள்

roller-boardயாழ்ப்பாண குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் பலர், தங்கள் தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக வறுமை நிலையை எதிர்நோக்கவதாகவும் கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாண கடற்பிராந்தியத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆழ்கடல் மீன்பிடி தொழில் றோலர் தடுக்கப்பட்டமையினால் அதையே நம்பி வாழ்ந்த சுமார் 800 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வங்கியில் உடமைகளை அடைவு வைத்து பாரிய முதலீட்டுடன் தொடக்கப்பட்ட தொழில் முடங்கியிருப்பதனால், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக வடகடல் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தரப்பினரின் செயற்பாடுகள் காரணமாக வடக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்களுடைய குடும்பப் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களையும் ஏனையவர்கள் போல் தொழில் செய்ய அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts