இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் அனைத்திலும் தேசிய கொடியை ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு அரச நிறுவனத்தலைவர்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறது.
தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கௌரவிக்குமாறும் இலங்கையின் அனைத்து பிரஜைகளிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.