பெப்ரவரி 12 இல் ஜனாதிபதி யாழ். விஜயம்

mahinda_rajapaksaயாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார்.

எதிர்வரும் 12ஆம் திகதி யாழ்பாணத்திற்கு வரும் ஜனாதிபதி, 13ஆம் திகதி வரை தங்கியிருந்து பல நிகழ்வுகளில் கலந்துகொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டார்.