புலிகளை நினைவு கூர்ந்து பொது நிகழ்வுகளை நடாத்துவது தண்டனைக்குரிய குற்றம்!- இராணுவம்

Sri_Lanka_Army_Logoஇறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து பொது நிகழ்வுகளை நடாத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கையின் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையில் மூன்று தசாப்தகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.

இந் நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவம் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடும் முகமாக தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விசேட இராணுவ வெற்றி விழாக்கள் நடைபெறவுள்ளன.

இதற்கு ஈடு செய்யும் வகையில் வடக்கில் சில பகுதிகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களை அனுஷ்டிக்கும் நிழ்வுகள் நடத்தப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குற்றச் செயலாகும். இலங்கை உட்பட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளனர். ஏனெனில், இவ் இயக்க பயங்கரவாத அமைப்பு என்றபடியால்.

ஆகவே இவ்வாறானதொரு தடை செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடாத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான விஷம முயற்சிகளுக்கு பொது மக்களை குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் ஊக்குவித்து வருகின்றது எனக் கூறினார்.

Recommended For You

About the Author: Editor