புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 14 பேர் விடுவிப்பு!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 14 பேரை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வு நேற்றயதினம் நடைபெற்றது.

poraligal family ltte-relese

வவுனியா புனர்வாழ்வு இணைப்புக் கரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் கையளித்தார்.

புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, விமானப்படை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள, பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor