புத்தூரில் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி

cow-maadu-vandil-safareeவலிகாமம் கிழக்கு புத்தூர் சரஸ்வதி சனசமூக நிலையமும், அன்னமார் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்து நடாத்திய மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி சரஸ்வதி சனசமூக நிலையத் தலைவர் தவநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி.கமலேந்திரன் கமல்) சரஸ்வதி மாட்டு வண்டில் சவாரி திடலினைத் திறந்து வைத்து மாட்டு வண்டில் சவாரி போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

இதில் யாழ்மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டிச் சவாரி வீரர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களை ஈ.பி.டி.பி யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி.கமலேந்திரன்வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் அச்சுவேலிப்பிரதேச இணைப்பாளர் செல்வராசா.லிங்கேஸ், கோப்பாய் பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் ஜங்கரன், புத்தூர் கிழக்கு சிவில் நிர்வாக சபைத் தலைவர் அன்ரனி லாசர், ஈ.பி.டி.பியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். பொலிஸார் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor