புதுக்குடியிருப்பு சிறுமிக்கு நீதிகேட்டு பேரணி!!

புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு இன்று கவயீர்ப்புப் பேரணியை முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் இடைநடுவே வீதியில் பயணித்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசி வழங்கிய உறுதிமொழிகளையடுத்து பேரணி முடிவுக்கு வந்தது.

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த யோகராசா நிதர்ஷனா (வயது-12) என்ற சிறுமி 3 நாள்களாக காணாமற்போன நிலையில் வீட்டுக்கு அண்மையாகவுள்ள பற்றைக் காணிக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த நிலையில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தார்.

சந்தேக நபரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்தது.

அத்துடன், சிறுமியின் வீட்டை தடயவியல் பொலிஸாரின் பரிசோதைக்கு உள்படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி காலை 7 மணிக்கு காணாமற்போனார் என்று தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor