புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரை கிராமத்திலுள்ள புதிய வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் சுவிஸ் டெவலொப்மன்ட் கோப்பரேசன் நிறுவனப் பிரதிநிதிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

dh2

மேற்படி நிறுவனத்தினர் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 120 வீடுகளையும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள அக்கரை பகுதியில் 32 வீடுகளையும் அமைக்கவுள்ள நிலையில் அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறும் பயனாளிகள் தொடர்பில் அவதான செலுத்தி உறுதிப்படுத்துமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தலா 5,50,000 ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் மேற்படி நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திரு மார்ட்டின் ஸ்டுடர், திட்ட முகாமையாளர் திரு.ரெட்டே கெர்பர், திட்ட பொறியியலாளர் ரி.காண்டிபன், ஈ.பி.டி.பி.யின் வலி.கிழக்கு இணைப்பாளர் ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor