புதிதாக நியமனம் பெற்ற சமுர்த்தி அலுவர்கள் கடமை பொறுப்பேற்பு

Samurdhiயாழ் மாவட்டத்தில் கடந்த மாதம் புதிதாக நியமனம் பெற்ற சமுர்த்தி அலுவலர்கள் கடமையாற்றுவதற்க்கான கிராம அலுவலர் பிரிவுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மூன்று கிராம அலுவலர்கள் பிரிவுகளில் சமுர்த்திக் கடமைகளை எந்த வகையான பதில் கொடுப்பனவுகளும் வழங்கப்படாத நிலையில் கடமையாற்றிய பல சமுர்த்தி அலுவலர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் தமது கடமைகளை ஒப்படைத்துள்ளார்கள்.

ஏற்கனவே முன்னூற்றி இருபத்தியொரு பேர் தெரிவு செய்யப்பட்டு எண்பத்தெட்டுப் பேர் சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வங்கிகளுடன இணைக்கப்பட்ட நிலையில் ஏனையவர்கள் கிராம அலுவலர்கள் பிரிவுகளில் கடமைக்காக இணைக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை ஏற்கனவே கடமையாற்றியவர்கள் சிலர் உள்ளக வெளியக இடமாற்றங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.