புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சுந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 9 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை படுத்தியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை மற்றும் ஜின்டெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் மரபனு சோதனை என்பனவற்றின் அறிக்கைகள் கிடைக்காமையால் வழக்கு விசாரணை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.