புகையிரத கடவையை இல்லாது செய்து புகையிரத பாதை அமைப்பதை எதிர்த்து போராட்டம்

இணுவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள புகையிரத கடவையை இல்லாமல் ஆக்கி புகையிரத பாதை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை (18) ஈடுபட்டனர்.

புகையிரத பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவிடாது மக்கள் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்கள்.

அவ்விடத்திற்கு சென்ற வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளர், இது தொடர்பில் யாழ்.இந்திய துணைத்தூதரகம் மற்றும் புகையிரத பாதை அமைக்கும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார்.

மேற்படி புகையிரத கடவையில், புகையிரத பாதைகள் அமைப்பதற்கு முன்னர் புகையிரத கடவைக்கான குறியீட்டு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இருந்தும், தற்போது திடீரென அந்த குறியீடுகள் அகற்றப்பட்டு, பாதையை மூடி புகையிரத பாதை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.