பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள்,ஏனையோரது நலனைக் கருத்தில் கொண்டு சட்டத்தை செயற்படுத்தும் போது அக்குற்றத்தை அரசாங்கத்தின் அல் லது பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்துவது கடப்பாடல்ல என யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.
‘யாழ்.கட்ளைத் தளபதிக்கு ஓர் அவசர மடல்’ என்ற தலைப்பில் நேற்றும் நேற்று முன்தினமும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரியில் வெளியான ஆசிரியர் தலையங்கத்திற்கு பதிலளிக்கையிலே யே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்த யாழ்.கட்டளைத் தளபதி அனுப்பி வைத்த பதில் மடல் அப்படியே இங்கு தரப் படுகிறது. ‘பிள்ளைகள் அனைவரும் சமமே. பெரி யோர்கள் என்ற முறையில் நாம் பிள்ளை கள் மீது அன்பு கொண்டுள்ளோம். அனைவரது பிள்ளைகளையும் எமது பிள்ளைகள் போன்றே கவனிக்கின்றோம். மகன் ஒருவரதும் மகள் ஒருவரதும் தந்தை என்ற ரீதியில் யாழ்ப்பாணத்தின் பிள்ளை களையும் எனது பிள்ளைகளை நோக்குவது போலவேநோக்கக்கூடிய தகுதியும் திறமையும் உண்டு.
என்றாலும் பிள்ளைகள் சிலரது முறை யற்ற செயற்பாடுகளால் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் வாழ்க்கை படுகுழியில் விழு வதை யாரும் எச்சந்தர்ப்பத்திலும் அனு மதிக்கப்போவதில்லை. யாழ்ப்பாணத்தின் ஆயிரக்கணக்கான பெற்றோர் தமது பிள்ளைகளை குணநலன் மிக்க பிள்ளைகளாக சமூகத்திற்கு அனுப்பு வதுபோல், ஒருசில பெற்றோர் மாத்திரம் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பிள்ளை களை சமூகத்திற்கு அனுப்புவது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களை நாம் துர திர்ஷ்டவசமாக கண்டிருந்தாலும் பிள்ளை களை நல்வழிப்படுத்த வேண்டியது பெற் றோரின் கடமையாகும்.
அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால், அதற்கான பொறுப் பிலிருந்து பெற்றோருக்கு ஒரு போதும் விடு பட முடியாது. பிள்ளைகள் அவ்வாறான தவறான வழியில் சென்று சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் அதிகாரிகள், ஏனையோரது நலனைக் கருத்தில் கொண்டு சட்டத்தை செயற்படுத்தும் இடத்து அதன் குற்றத்தை அரசாங்கத்தின் மீதோ அல்லது பாதுகாப்பு தரப்பின் மீதோ சுமத்துவது கடப்பாடல்ல. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் அண்மையில் நிகழ்ந்த சம்பவத்தின் மூலாரம் பமாவது, வங்குரோத்து அரசியல்வாதிகள், பயங்கரவாதத்திற்கு உரமூட்டி, பிள்ளைகளை தமது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது கையாற்களாகக்கிக் கொண்டமையாகும்.
அந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாரும் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற் காதமையினால் யாழ்.பல்கலைக்கழகத்திற் குள் கலவரங்களும் குழப்ப நிலையும் தோன் றுவதில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவர்களது பிள்ளைகள் சர்வதேச பாட சாலைகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ கல்வி பயில்வதாக நான் நம்புகின்றேன். யாழ்ப்பாண மாணவர்கள் தலையிட்டு மேற் கொள்ளும் கலவரங்கள் காரணமாக தமது கல்வியே இருளடையும் என்பதை அந்த மாணவர்களும் பெற்றோரும் புரிந்துகொள் ளாமையானது அந்த மாணவர்களது பெற் றோரதும் பொதுவாக நாட்டினதும் அபாக்கியமே. வலம்புரி பத்திரிகையின் நிருபரொருவரும் 2012.12.21ம் திகதி யாழ்.பாதுகாப்பு படை களின் கட்டளைத் தலைமையகத்தில் மேற்படி ஆசிரியர் தலையங்கத்திற்கு ஏதுவான கலந்துரையாடலில் கலந்து கொண்டமை யினால், அன்றைய தினம் நான் வெளியிட்ட கருத்துக்களை நன்கறிந்திருப்பார்.
பொலிஸாரினால் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டமையானது,அவர்கள் மீது கொண்ட வெறுப்பினாலோ அல்லது வேறு காரணங் களாலோ அல்ல. நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம் ஒழுங்கு மீறப்பட்டு ஏனையவர்களையும் அதற்காக உந்துதலளித்து அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணத்திலாகும். புலிப் பயங்கரவாதிகளால் தமது இயக் கத்திற்கு பலவந்தமாக இணைத்துக் கொள்ளப் பட்ட மற்றும் பிள்ளைகளைக் கடத்தி சென்ற காலமும், மக்களின் பாதுகாப்பிற்காக அமைக் கப்பட்டிருந்த வீதித் தடைகள் ஊடாக பயணி த்த காலமும், மின்சாரம் மற்றும் போக்கு வரத்து போன்ற வசதிகள் இல்லாமையினால் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருந்த காலமும், சமாதானம் மலர்ந்து 03 வருடங்கள் கழியும்பொழுது வயது வந்த மாணவர்களும் பெற்றோர்களுக் கும் மறந்துபோயிருப்பது துரதிர்ஷ்டமானதே.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பிள்ளைகள் சிலரை, தனிப்பட்ட முறையில் தலையிட்டு விடுவித்துக் கொள்வதற்காக நான் எடுத்த முயற்சி வெற்றியடைந்ததை யிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் ஏனைய மாணவர்கள் நால்வரும் ;தொடர்ந்தும் எமது தலைவர் பிரபாகரனே, நாங்கள் அவ ரின் ஆதரவாளர்களே என்ற கொள்கையுடன் இருக்கின்றனர். தமது வர்க்கத்தினரை மட்டுமன்றி முழு நாட்டையும் அழிவுக்கு இட்டுச் சென்ற பயங் கரவாத கொலையாளியை, தமது தலைவ னாக கருதும் கொள்கையில் இருக்கும் வரை யில் அவர்களின் விடுதலைக்காக நான் ஆஜ ராக முடியாததாகும். ஏனெனில் நான் எனது பிள்ளைகளின் தந்தையைப்போன்று ,யாழ்ப் பாணத்தில் இருக்கும் மேலும் ஆயிரக்கண க்கான பிள்ளைகளின் தந்தை என்பதுடன் பாது காப்பையும் வழங்கும் பாதுகாப்பு தரப்பின் பிரதானி என்பதாலாகும்.
நான் யாழ். பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதை நீங்கள் நன்கறிவீர்கள். ஏழை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல், கற்றல் உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல், மருத்துவ முகாம்களை நடத்தி தேவைப்படும் பிள்ளைகளுக்கு சிகிச்சை பெற்றுக் கொடுத்தல், விளையாட்டு மைதா னங்களை அமைத் தல், பாடசாலைக் கட்டிடங்களை அமைத்தல்,பரீட் சைகளில் சித்தியடை யும் மாணவ, மாண விகளுக்கு பரிசில் களை வழங்கி அவர் களின் வெற்றியை பாராட்டி உற்சாகப் படுத்துதல் போன்ற வற்றை மேற் கொண் டது பிள்ளைகளின் கல்விக்காவன்றி எனது தனிப்பட்ட இலாபத்திற்காகவல்ல. தங்கள் பத்திரி கை யில் 2012.12.23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களில் ஆசிரியர் தலையங் கத்தில் குறிப்பிட் டுள்ளது போன்று தாய் ஒருவருக்கு தனது பிள்ளைக் காக கண்ணீர்விட வேண்டி ஏற்பட்டமை யானது எனதோ அல்லது வேறு யாருடையதோ குற்றத்தினால் ஏற் பட்ட தொன்றன்று.
பிள்ளையை உரிய வழி நடத்தா தது அந்தத் தாயின் குற்றமாகும். பிள்ளையை நேர்வழிப்படுத்தும் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ ஒரு போதும் கண்ணீர்விடவேண்டி ஏற்படாது. அந்தப் பெற்றோர் செய்யவேண்டிய தானது, குற்றம் புரிந்த தனது பிள்ளையை கைது செய்த பாதுகாப்பு தரப்பினர் மீது குற் றம் சுமத்தாமல் அவர்களை தவறான வழி யில் செலுத்திய வங்குரோத்து அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துவதுடன்,பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டத்தவறிய தம் மீதே குற்றம் சுமத்திக் கொள்வதாகும். பொலிஸாரினால் மனிதப் படுகொலை யாளர்களான பயங்கரவாதிகளின் ஆதரவா ளர்களான அந்த மாணவர்களை தடுத்து வைத் திருப்பது மேலும் ஆயிரக்கணக்கான பெற் றோர் கண்ணீர்விடுவதை தவிர்ப்பதற்காகும்.
சட்டத்தை அமுல்படுத்தும்போது குற்றம் புரிந்தவர் சிங்களமா,தமிழா,முஸ்லிமா என்ற விபரங்கள் முக்கியமல்ல.
தெற்கே பல்கலைக்கழக மாணவர்கள் சமூக விரோதச் செயற்பாடுகளின் ஈடுபட்ட சந்தர்ப்பங்களில் ,சட்டம் ஒரே வடிவிலேயே செயற் பட்டமை நீங்கள் நன்கறிந்த விடயமாகும். உங்கள் எதிர்பார்ப்பின்படி தடுத்து வைக்கப் பட்டுள்ள மாணவர்களை விடுவிப்பதானது, யாழ்.கட்டளைத் தளபதியாகிய என்னால் நிறைவேற்ற முடியாத விடயம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்கள் பிரபாகரன் தமது தலைவர் என்ற தமது கொள்கையில் இருந்து விடுபட்டு உரிய வழிக்கு திரும்பிய பின்னர் விடுதலை பெறுவர்.
பொலிஸாரினாலும் பயங்கரவாதத் தடுப்பு பிரி வினராலும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அந்த மாணவர்களின் சமூக விரோத மனநிலையை மாற்றி, அவர்களை விடுவித் துக் கொள்வதை துரிதப்படுத்திக் கொள்வது பெற்றோர்களதும் அவர்களது கல்விக்கு பொறுப்பான யாழ். பல்கலைக்கழகத்தின் விரிவு ரையாளர்களதும் பொறுப்பென்பதை ஞாபகப் படுத்த விரும்புகின்றேன். நிலைமை அவ்வாறு இருக்கையில் குறிப் பிட்ட மாணவர்கள் 4 பேரையும் விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியாது என்று கூறுவது அவர்களது எதிர் காலத்தை அவர்களே இருளடையச் செய்து கொள்வதாகும் என்றுள்ளது.