பிள்ளைகளினால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் கைதடி முதியோர் இல்லத்தில் இணைப்பு

kaithady_elders_homeயாழ்.மாவட்டத்தில் வயோதிப பெற்றோர்கள் பலர் அவர்களது பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பாரற்ற நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகளில் பல வருடங்களாக வேலைக்கமர்த்தப்பட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த சிலர் அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தவர்கள் இறந்து போன நிலையிலும்,இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாலும் கவனிப்பதற்கு எவருமற்றதால் வயோதிப நிலையில் கைதடி முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்ந்திருப்பதாக இல்ல பொறுப்பாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல், மே மாதகாலங்களில் இவ்வாறு நான்கு எழுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வந்து இணைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கந்தப்பளை, ஹட்டன், நுவரெலியா போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாக இவர்கள் உள்ளார்கள்.

பல ஆண்டு காலமாக இவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததால் காலப்போக்கில் இவர்களுடைய சொந்தங்களினது தொடர்புகளும் அற்றுப் போயிருந்தன.

இவர்களை வீட்டில் வைத்திருந்தவர்களும் கைவிட்டு விட்டதால் இவர்கள் தமது தள்ளாத வயதில் எவரும் கவனிப்பாரற்றுக் கடைசியில் முதியோர் இல்லத்தை நாடி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.