பிரிட்டனின் தெற்காசிய விவகார அதிகாரியுடனான மாவட்ட செயலாளரின் சந்திப்பு ரத்து

london-visitபிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியுடனான யாழ். மாவட்ட செயலாளரின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி நில்கோம்ரன் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துடன் சந்திப்பொன்றினை மேற்கொள்ளவிருந்தார். எனினும் தவிர்க்கமுடியாத காரணத்தால் மாவட்ட செயலாளருடனான சந்திப்பு இடம்பெறவில்லை என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது

இதேவேளை, இந்த தூதுக்குழுவின் யாழ். பிரதேசத்தின் நிலமைகள் குறித்து நேரில் ஆராய்துள்ளார்.அத்துடன் அச்சுவேலி வளலாய் பகுதிக்குச் சென்று பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் அவர் பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor