பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடக்கைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் புத்தளத்தில் கைது!!

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்லவிருந்த, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸார் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயணித்த வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.