பிரதேச அபிவிருத்தி வங்கியால் 4 மாதத்தில் மாத்திரம் 1000 பேருக்கு கடனுதவி

Regional -Development- Bankயாழ். மாவட்டத்தில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி வங்கி கடந்த 4 மாதத்திற்குள் மட்டும் 1000 பேருக்கு சுயதொழில்களுக்கான கடனுதவிகளை வழங்கியுள்ளதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்.கிளை முகாமையாளர் எஸ்.சிவலோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2 வருடங்களாக யாழ். மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கி சேவையாற்றி வருகின்றது.

அதன் முதல் கட்டமாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் சுயதொழிலுக்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் வங்கிச் சேவை ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 1800 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு சுயதொழில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் கடந்த 4 மாத காலப்பகுதியில் மாத்திரம் 1000 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராம ரீதியில் உள்ள மாதர் சங்கங்களின் ஊடாக மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் உள்ள அங்கத்தவர்களின் சுயதொழிலுக்கான கடன் உதவிகள் வழஙங்கப்பட்டுள்ளன.

அதன்படி கோண்டாவில், கொக்குவில் கல்விங்காடு, சாவகச்சேரி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு ஆகிய இடங்களில் குறித்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Recommended For You

About the Author: Editor