வேறுபாடுகள் இல்லாமல் எங்கள் பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒன்றிணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் சுன்னாகத்தில் நிர்மானிக்கப்பட்ட பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபைகளின் அபிவிருத்திப்பணிகளில் மாகாண சபை பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. அபிவிருத்தி பணிகளில் வேறு பாடின்றி செயற்பட்டு வருகின்றது. இதனால் எமது பிரதேசங்களின் அபிவிருத்தி பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்ககூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இதனால் இங்கு பாரிய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றது இந்த அபிவிருத்திப்பணியில் நாங்களும் வேறுபாடுகள் இல்லாமல் எங்கள் பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒன்றிணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றோம் என்றார்.
அத்துடன் எமது பிரதேசத்திற்கு வருமானத்தை தரக்கூடிய இரண்டு வளமான சந்தைகள் இருக்கின்றது இந்த இரண்டு சந்தைகளையும் நவீன முறையில் புனரமைத்து தருமாறு இது தொடர்பில் அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.