பாஷையூரில் இரவிரவாக அமைக்கப்படுகின்றது பாரிய படைமுகாம்!- மக்கள் அச்சத்தில்

army_slபாஷையூரில் மக்கள் முன்னேற்றக் சனசமூக நிலையம் அடங்கலாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் அவசர அவசரமாக நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இராணுவ நடவடிக்கையின் போது இப்பகுதியில் கடற்பகுதியின் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன.

ஆயினும், காலப்போக்கில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டதோடு ஏனைய பகுதிகளை தொடர்ந்தும் இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமை முற்றாக அகற்றுமாறு மக்கள் கோரி வந்த நிலையிலேயே இப்போது பாரிய முகாம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரவு இரவாக பாரிய மின்குழிகள் போடப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டு சீமெந்தினாலும் பாரிய கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.