பால் மாக்களின் விலை அதிகரிப்பு

Anchor_Instant_Full_Cream_Milk_Powderபால் மாக்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது என்று வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பை அடுத்தே உள்ளூர் சந்தைகளிலும் பால் மாக்களின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் 400 கிராம் பால் மாக்களின் விலை 61 ரூபாவினாலும் ஒரு கிலோ பால்மாக்களின் விலை 152 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. நேற்றய தினம் கூடிய விலை கட்டுப்பாட்டு குழுவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சு அறிவித்துள்ளது.

Related Posts