பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் புதனன்று யாழ்.விஜயம்

BJB-indiaஇந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரெஸ் பாபு ஆகியோரே விஜயம் செய்யவுள்ளனர் என இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப் மற்றும் இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவரும் வருகை தரவுள்ளனர்.

இக்குழுவினர், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor