பாடும்மீன் அணி சம்பியன்

News-bet-in-footballஇளவாலை ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகம் வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் நடத்திய கழகங்களுக்கிடையிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் குருநகர் பாடும் மீன் அணி சம்பியனாகியது.

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த கழகங்களின் கால்ப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இந்தக் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (24) இரவு மின்னொளியில் இடம்பெற்றது.

இதில் குருநகர் பாடும் மீன் அணியினை எதிர்த்து நாவாந்துறை சென்மேரிஸ் அணி மோதியது,

ஆட்டநேரத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. அதில் பாடும் மீன் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

Recommended For You

About the Author: Editor