பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு

traffic_policeயாழ். நகர பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற்று வருகின்றது. யாழ். மாநகர ஆணையாளர் எஸ்.பிரணவநாதனின் ஏற்பாட்டில், யாழ். பொது நூலகத்தினால் வீதி போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தினமும் காலை 8 மணிமுதல் 8.30 மணி வரை வீதி சமிஞ்ஞைகள் மற்றும் வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகின்றன. வீதி விபத்தினை எவ்வாறு கட்டுப்படுத்தல், மாணவர்கள் வீதிகளில் சமாந்தரமாக செல்லுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கங்கள் மற்றும் குறியீடுகள் காண்பிக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இக்கருத்தரங்கில், யாழ். போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா மற்றும், யாழ். பொதுநூலக உதவி நூலகர் கே.எம. நிஷாந் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கினை முன்னெடுத்துச் வருகின்றார்கள்.

Recommended For You

About the Author: Editor