பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாணத்தில்

ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் மதர் சிறி லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கினதும் தெற்கினதும் பாசம் ஒன்றிணைகின்றது என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.

mother-srilanka

வடக்கு தெற்கு நட்புறவுப்பாலம் எனும் இந்த தேசிய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களையும் தென் பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவர்களையும் ஒன்றிணைத்து இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

நான் மாற்றமடைந்தால் நாடும் மாற்றமைடையும் எனும் நாடு தொடர்பான நேர்மறையான சிந்தனையை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டுசெல்லும் நோக்கிலும் நாட்டின் சகல மொழி பேசும் மக்களிடத்திலும் சகோதரத்துவத்தினை கட்டியெழுப்பி ஒற்றுமையான எதிர்காலத்தினை உருவாக்கும் நோக்கிலும் ஜனாதிபதி செயலகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதில் பங்குகொள்ளும் முகமாக நேற்று தென்பகுதியை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட பாடசலை மாணவர்கள் விசேட புகையிரதம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். இவ்வாறு வருகை தந்த தென்பகுதி மாணவர்களுடன் யாழ் கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களும் இணைத்து இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இச்செயற்பாட்டில் பயிற்சிப்பாசறைகள், தலைமைத்துவப்பண்புகள் தொடர்பான பயிற்சி நெறிகள், மற்றும் சிநேகபூர்வமான விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மதர் சிறி லங்கா அமைப்பின் தலைவர் ஜானகி குறுப்பு, யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் இந்த செயற்பாடுகளில் இணைந்துள்ளனர்.