பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி மூடைகள் பரிசோதனை

rise-arisiஉலக உணவுத் திட்டத்திற்கு அமைவாக யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி மூடைகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் இப்பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில், உடுவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மேற்கொண்ட சோதனைகளின்போது 17 பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத பழுதடைந்த அரிசி மூடைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் பெயரில் அனைத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பாடசாலைகளில் உலக உணவுத் திட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள அரிசமூடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய சோதனை நடவடிக்கைக் காரணமாக பாடசாலை மட்டத்தில் நல்ல அரிசியிலான உணவை மாணவர்கள் பெறக்கூடிய சந்தர்ப்பம் கடந்த பல வருடங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.