பல்கலை மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.

suthakaran

நெல்லியடிப் பகுதியில் வசிக்கும் நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

suthakaran-fb

விடிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் “மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து என் உயிர் பிரியும் என்றால்” என்று அவர் பதிவிட்டுள்ளாராம். இன்று இவரது பிறந்த நாள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது

விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முகப்புத்தகத்தில் தற்கொலை செய்வதாகப் பதிவிட்டபின் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன.

அண்மைக்காலங்களில் மூவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.