பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சிங்கள மாணவர்களுக்கெதிராக முறைப்பாடு!

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.ரிசிதரன் சிங்கள மாணவர்கள் நான்குபேருக்கு எதிராக கோப்பாய்ப் பிரதேச காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், மாணவர் ஒன்றியத் தலைவர் ரிசிதரனை நேற்றைய தினம் கோப்பாய் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இதனையடுத்து ரி.ரிசிதரனை 2,00,000 ரூபா பிணையில் செல்வதற்கு சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதி யளித்தார்.

மோதலில் காயமடைந்து கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவன் வழங்கிய முறைப்பாட்டினடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோப்பாய் காவல்துறையினரால் டிசிதரன் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது சிங்கள மாணவர்களே தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவித்த மாணவர் ஒன்றியத் தலைவர் டி.டிசிதரன், அன்றைய சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகளாக நான்கு சிங்கள மாணவர்களின் பெயர் விபரங்களை மன்றில் சமர்ப்பித்தார். இதனடிப்படையில் சிகான், பாலசூரிய, அரவிந் மற்றும் மனோஜ் ஆகியோருக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

Related Posts