பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சில கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கடந்த சில தினங்களாக சத்தியாக கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலாங்கொடை பம்பாஹினவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பதினொரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இரண்டு கடைகளும் ஒரு முச்சக்கர வண்டியும் தாக்குதலின் போது சேதமாக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸார் தெரிவித்துள்ளனர்.