பருத்தித்துறையில் குடும்பஸ்தர் தற்கொலை

யாழ்.பருத்தித்துறை திக்கத்தை சேர்ந்த 59 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தனக்குதானே தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்துவந்ததாகவும், அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான அவர் முதலில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts