பரமேஸ்வரா சந்தியில் பெருமளவு ஆயுதங்கள்!

sheel-bomb-minesயாழ் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள பரமேஸ்வரா சந்தியில் வீதியின் அருகில் மண்ணெண்ணை பரலில் புதைத்து வைத்திருந்த பெருமளவு ஆயுதங்களை படையினரும் பொலிஸாரும் தற்போது மீட்டு வருவதாகவும் இதனால் அப் பகுதிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ் ஆயுதங்கள் எப்பொழுது யாரால் வைக்கப்பட்டது போன்ற விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

பிந்திய செய்தி

வீதியில் பாலம் அமைக்கும் நோக்குடன் நிலத்தைக் தோண்டியபோது இரண்டு பீப்பாய்களில் மண்ணுடன் போட்டு இவை புதைக்கப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை இராணுவத்தினர் மீட்டு கொண்டு செல்ல முற்பட்டபோது, பொலிஸார் அவற்றை தடுத்து நிறுத்தி பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.