Ad Widget

பரணகம ஆணைக்குழுவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை வரவேற்கிறோம்! – சுமந்திரன்

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், இறுதிப் போரின்போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் என்பன தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்கிறோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றுமுன்தினம் கையளித்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அவர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் இந்த அரசாங்கம், ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Posts