பயங்கரவாதம் எனும் சொல்லை எதிர்க்கின்றோம் -யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்

jaffna-universityபயங்கரவாதம் என்ற சொல்லிற்கு முற்றாக எதிர்ப்பு தெரிவிப்பதுடன் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்காது பகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் நேற்றயதினம் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மீள் இணக்கத்திற்கான கலந்துரையாடல் ஒன்று கிறின் கிறஸ் விருந்தினர் விடுதியில் இன்று மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடல் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடி ஏற்பாடுகளை செய்யவில்லை என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் மீள் இணக்கத்திற்கான கலந்துரையாடல் என்று எழுதப்பட்டுள்ள கடிதத்தில் பயங்கரவாதத்தினை ஒழித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீள் இணக்கம் என்ற தொனிப்பொருளில் ஆராயவுள்ளதாக எழுதப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

‘பயங்கரவாதம்’ என்ற சொல்லை தாம் முற்றாக நிராகரிப்பதுடன், அச்சொல்லிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றாகவும் அவர்கள் கூறினர்.

போராட்டம் விடுதலைக்கான போராட்டமே தவிர பயங்கரவாத போராட்டம் அல்ல என்றும், வடக்கில் மீள் இணக்கம் சாதகமாக இல்லை. சிங்கள குடியேற்றங்கள் மற்றும் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள் காணப்படுகின்றன.

இத்தகைய தலையீடுகள் முற்றாக நீக்கப்பட்டு, தமிழர்களுக்கான உரிமைப்பாடும், அடிப்படை பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும், அவ்வாறு தீர்க்கபடும் பட்சத்தில் மீள் இணக்கப்பாடு என்னும் கலந்துரையாடலில் கலந்து கொள்வது பிரியோசனமாக இருக்காது என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங்கள தமிழ் உணவுகளை சாப்பிடுவதால் எந்த இணக்கப்பாடும் இடைக்கப் போவதில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் சுட்டிக் காட்டினர்.

Recommended For You

About the Author: Editor