பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வெற்றி

sportsnews-logoபம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும் – மானிப்பாய் இந்து கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

மேற்படி இரு அணிகளுக்கும் இடையிலான 50 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்டுத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 47 பந்துபரிமாற்றங்களில் 192 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஆர்.திவாகர் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

193 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மானிப்பாய் இந்து கல்லூரி அணி, 33 பந்துபரிமாற்றங்களில் 136 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

பந்துவீச்சில் பம்பலப்பிட்டி இந்து அணி சார்பாக எஸ்.ஜஸ்லீ 22 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இந்த போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர், ஆட்டநாயகனாக பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் எஸ்.ஜஸ்லீயும், சிறந்த சகலதுறை வீரராக அதே அணியினைச் சேர்ந்த ஆர்.தீபாகரும், சிறந்த களத்தடுப்பாளராக மானிப்பாய் இந்து அணியின் எஸ்.சஜீவனும் தெரிவு செய்யப்பட்டனர்.