பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழில் தாக்குதல்

thinakkural_01தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புத்தூரில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் விநியோகிப்பதற்கு எடுத்துச்சென்ற பத்திரிகையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் எரியூட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த விநியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.