பட்டதாரி பயிலுனர்களுக்கு இருநாள் விடுமுறை; பொது நிர்வாக அமைச்சு

slas-logo_srilankaபட்டதாரி பயிலுனர்களாக அரசாங்கத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டு ஒன்பது மாதங்களை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் இரு நாள் விடுமுறைகளை வழங்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

தரவுகள் மற்றும் தகவல்களைச் சேகரித்தல் முன்னுரிமை அடிப்படையில் கருத்திட்டங்களையும் நிகழ்ச்சி திட்டங்களையும் இனங்காணல் போன்ற செயற்பாடுகளுக்காக 2011.12.14 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கு கீழ்வருமாறு விடுமுறைகள் வழங்குவதற்கு 2012.12.19 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் ஒன்பது மாத பயிற்சிக் காலத்தை பூர்த்தி செய்துள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கு மாதம் ஒன்றிற்கு இரண்டு நாள் அமய விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதுடன்,

அத்துடன் ஒன்பது மாதம் பூர்த்திசெய்த பெண் பட்டதாரிகளுக்கு எண்பத்தி நான்கு நாள் முழு வேதனத்துடன் கூடிய பிரசவ விடுமுறைகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor