படையினரை யாழ். மக்கள் விரும்புகின்றனர்: லலித் வீரதுங்க

Sri-Lankan-Armyயாழ்ப்பாணத்திலுள்ள காணிகள் பொது மக்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதபடைகளை அங்கு தொடர்ந்தும் இருக்குமாறு யாழ்ப்பாண மக்கள் மனப்பூர்வமாக கேட்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

பல நிலங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்துக்கு தேவையான நிலங்களை அரசாங்கம் வைத்துக்கொள்ளும். உயர் பாதுகாப்பு வலயம் 60 சதவீதத்தால் குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் ஆயுத படைகளின் நலன்புரி சேவைகளால் கவரப்பட்ட மக்கள் ஆயுதப்படைகள் தொடர்ந்து அங்கு இருக்கவேண்டுமென கேட்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

’13 ஆவது திருத்தம் ஒரு வெள்ளையானை’ என்றும் அவர் கூறினார். ஆக குறைந்த மட்டமான கிராமத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென என்றும் கூறியுள்ள அவர் மாகாண சபைகள் எவ்விதத்திலும் பயன்தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.